அரசியல் களத்தில் எகிறும் பரபரப்பு...அண்ணாமலையுடன் அதிமுக தலைவர்கள் சந்திப்பு..?

அரசியல் களத்தில் எகிறும் பரபரப்பு...அண்ணாமலையுடன் அதிமுக தலைவர்கள் சந்திப்பு..?
Published on: 
Updated on: 
1 min read

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன், அதிமுக மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல் :

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா காலமானதை அடுத்து, பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும், யாருடன் கூட்டணி வைப்பது குறித்தும் அவ்வப்போது ஆலோசகை கூட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிமுக தலைவர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பா?

அந்தவகையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மறுபுறம் அ.தி.மு.க. தேர்தலில் களமிறங்க உள்ளது. இந்நிலையில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும்படி அண்ணாமலையிடம் கோரிக்கை வைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com