"பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது நல்ல செய்தி" - தமிமுன் அன்சாரி

Published on
Updated on
1 min read

பாஜகவில் இருந்து அதிமுக வெளியேறியது துணிச்சலான முடிவு என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுவிக்க ஆதரவு கோரி சேலம் நெடுஞ்சாலை நகரில் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் சிறைவாசிகளை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுவிக்க வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ஆதரவு கோட்டதாகவும் தெரிவித்தார்.  அதோடு,  பாஜகவில் இருந்து அதிமுக வெளியேறும் துணிச்சலான முடிவிற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டதாகக் கூறினார்.

மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதன் மூலம் ஆல் இந்திய சூப்பர் ஸ்டார் ஆகிவிட்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இந்தியாவிற்கு ரோல் மாடலாக திகழ்வதாகவும், தமிழ்நாட்டிலும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி இட ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com