இது தொடர்பாக அதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏழை, எளிய மக்கள் வாழ்க்கையில் பல உயரங்களைத் தொட வேண்டும் என்பதற்காகவும், தீய சக்திகளிடம் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் எம்.ஜி.ஆரால் 16 லட்சம் தொண்டர்களோடு தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக என தெரிவிக்கப்பட்டுள்ளது.