கூட்டணி தர்மத்தை மதிக்காத அதிமுக.... தேர்தல் தோல்வி உறுதி!!

கூட்டணி தர்மத்தை மதிக்காத அதிமுக.... தேர்தல் தோல்வி உறுதி!!
Published on
Updated on
1 min read

திமுக கூட்டணி கொள்கை கூட்டணி என்றும் அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரைக்காண ஆலோசனை கூட்டம் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

நேரடியாக பயனாளர்களை:

முதலமைச்சர் அறிவித்திருக்கும் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்று பயனடைய கூடிய வகையில் உள்ளது என்றும் 20 மாத காலத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் 20 மாத காலத்தில் ஒன்றரை லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமோக ஆதரவு:

மதச்சார்பற்ற கூட்டணி சார்பாக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு மக்கள் அமோக ஆதரவை அளித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தர்மத்தை நம்பி:

கூட்டணி தர்மத்தை மதித்து நடக்கும் திமுக இடைதேர்தலில்  காங்கிரஸ் வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கிறோம் எனவும் ஆனால் அதிமுக கூட்டணி தர்மத்தை மதிக்காமல் தேர்தலை எதிர்கொள்கிறது எனவும் பேசியுள்ளார்.

திமுக கூட்டணி கொள்கை கூட்டணி என்றும் அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com