அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா - ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை ..!

அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா - ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை ..!
Published on
Updated on
1 min read

அதிமுகவின் 52-ஆம் ஆண்டு துவக்க விழாவில் அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை இன்று கொண்டாடப்படுவதை ஓட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், புகழந்தி, வெள்ளமண்டி நடராஜன், உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில்,  ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com