
அதிமுக.வின் முதல் எம்.பியான கே.மாயத்தேவர், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய காலத்தில் உடன் இருந்தவர்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள டி.உச்சப்பட்டியைச் சேர்ந்த கே.மாயத்தேவர், எம்.ஜி.ஆர். மீது தீவிர பற்று கொண்டவர். கடந்த 1973ஆம் ஆண்டு திமுகவைவிட்டு பிரிந்து, எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கிய போது, திண்டுக்கல் தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, மாபெரும் வெற்றி பெற்றவர் மாயத்தேவர்.
88 வயதான மாயத்தேவர் உடல்நலக் குறைவால் காலமானார்
தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்தவர் ஒரு சில காரணங்களுக்காக அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். அப்போதும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றார். அதன்பின்னர் கடந்த 15 வருடங்களாக அரசியலை விட்டு விலகி இருந்து வந்தவர், உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நல்லடக்கம் புதன்கிழமை மதியம் நடைபெறுகிறது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.