வெள்ளை சட்டையில் அஜித் - விஜய்.. இது வெறும் தற்செயல் இல்ல! டீகோட் செய்யும் தவெக தொண்டர்கள்.. இணையத்தில் பற்றி எரியும் தீ!

ஒரு ரகசியப் புரிதலைக் காட்டுவதாகத் தொண்டர்கள் முடிச்சுப் போட்டுப் பேசி வருகின்றனர்...
vijay and ajith
vijay and ajith
Published on
Updated on
2 min read

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகின் இரு துருவங்களான நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகர் விஜய் ஆகியோரின் உடை ஒற்றுமை இப்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. காலையிலேயே திருவான்மியூரில் வாக்கு செலுத்த வந்த அஜித் குமார் வெள்ளை நிற சட்டையில் வந்த நிலையில், நீலாங்கரையில் ஓட்டுப் போட வந்த விஜய்யும் அதேபோல ஒரு சிம்பிளான வெள்ளை நிற சட்டையில் என்ட்ரி கொடுத்தார். இந்த ஒற்றுமையைப் பார்த்த தவெக தொண்டர்கள், "இது வெறும் கோ-இன்சிடென்ஸ் இல்ல, இது ஒரு பெரிய அரசியல் மூவ்" என்று சொல்லி இணையத்தில் ஃபயரை கிளப்பி வருகின்றனர்.

அஜித் குமார் எப்போதும் அரசியலில் இருந்து தள்ளி இருப்பவர் என்றாலும், அவரது ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு மெசேஜ் சொல்வதாகவே அவரது ரசிகர்கள் கருதுவார்கள். இன்று அவர் விடியற்காலையிலேயே வந்து ஓட்டுப் போட்டது ஒரு பக்கம் இருக்க, அவர் வெள்ளை ஷர்ட் அணிந்து வந்திருந்தார். அடுத்து வந்த விஜய், தானும் அதே நிறத்தில் சட்டை அணிந்து வந்திருந்தது, தவெக தொண்டர்களுக்கு ஒரு மிகப்பெரிய குஷியைக் கொடுத்துள்ளது. அஜித்தும் விஜய்யும் ஒரே கலர் ட்ரெஸ்சை தேர்ந்தெடுத்திருப்பது, அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் ஒரு ரகசியப் புரிதலைக் காட்டுவதாகத் தொண்டர்கள் முடிச்சுப் போட்டுப் பேசி வருகின்றனர்.

குறிப்பாகத் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள், அஜித்தின் வெள்ளைச் சட்டையை விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒரு மறைமுக ஆதரவாகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். "தல - தளபதி இருவருமே மாற்றத்தை விரும்புகிறார்கள், அதன் வெளிப்பாடுதான் இந்த வெள்ளை நிறம்" என்று எக்ஸ் (X) மற்றும் பேஸ்புக் தளங்களில் பதிவுகள் குவிகின்றன. சினிமாவில் இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பவர்கள். இந்தத் தேர்தலில் விஜய் ஒரு கட்சியின் தலைவராகக் களம் இறங்கியுள்ள சூழலில், அஜித்தின் இந்த 'ஒயிட் அண்ட் ஒயிட்' லுக், ஒரு பாசிட்டிவ் வைப் கொடுப்பதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, "வெள்ளை நிறம் என்பது தூய்மையான அரசியலைக் குறிக்கிறது" என்றும், எங்கள் தளபதிக்கு தான் அஜித்தின் ஒட்டு என்றும் தவெக தரப்பினர் குஷியில் உள்ளார்.

வாக்குப்பதிவு முடிந்து தேர்தல் முடிவுகள் வரும்போதுதான், மக்கள் யாருக்கு ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது தெரியும். ஆனால், அதற்கு முன்பே இந்த வெள்ளைச் சட்டை மேட்ச் மூலம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இணையத்தில் ஒரு வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர். 2026 சட்டமன்றத் தேர்தலின் மறக்க முடியாத ஒரு கிளாமர் தருணமாக மாறிவிட்டது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com