‘காது, மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு…” - அஜித் குமார் விசாரணை காவல் மரணம் - ஐகோர்ட் காட்டம்

கொலையாளி கூட இவ்வளவு வேதனையை அனுபவித்து இருக்க மாட்டார். காது மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு...
ajith kumar
ajith kumar
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27).  இவர் அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். ஜூலை 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் இருந்த  14 பவுன் நகை காணாமல் போனது குறித்து, அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டில் 24 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் தமிழகத்தில் காவல்துறை ஆட்சி நடக்கிறதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இதுகுறித்த வழக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வில் விசரணைக்காக வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்தனர் “அரசு தனது சொந்த குடிமகனையே கொன்றுவிட்டது” - கொலைகாரன் கூட இப்படி தாக்க மாட்டான்.

ஏன் காவல் நிலையத்தில் விசாரணை நடக்கவில்லை? அதற்கான சிசிடிவி காட்சிகள் இல்லை. ஆனால் காது, மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு அஜித் தாக்கப்பட்டுள்ளார். அந்த ரத்தக்கறைகள் எங்கே? சாட்சியங்களை சேகரிக்காமல் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? வாய் மற்றும் பிறப்பு உறுப்பில் மிளகாய் பொடியை தூவி இருக்கிறார்கள்.

கொலையாளி கூட இவ்வளவு வேதனையை அனுபவித்து இருக்க மாட்டார். காது மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு அஜித் குமார் தாக்கப்பட்டுள்ளார் என்று நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர்  இந்த வழக்கை அரசியலாக்கப் பார்ப்பதாக வாதம் வைக்கப்பட்ட நிலையில், நீங்கள் எதிர் தரப்பாக இருந்தாலும் இதைத்தான் செய்வீர்கள் என்று நீதிபதிகள் சுளீர் பதிலளித்தனர். சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் வழக்கை யாரும் மறந்திட முடியாது என்று கூறினர்.

பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் தாய் கொடுத்த புகாரில் கூட இன்னும் வழக்கு பதியப்படவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். உயர் அதிகாரிகள் முதற்கொண்டு இதில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெறாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

காவல்துறை தான் மக்களுக்கு பாதுகாப்பு, அந்த காவல்துறையே இப்படி செய்யலாமா?.. இனி இது போன்று போலீசார் யாரும் நடக்கக் கூடாது.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 8 ஆம் தேதிக்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக சிபிஐக்கு வழக்கை மாற்றம் செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com