

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 4 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 5 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.
மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தனது கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ) ஐந்து இடங்களை ஒதுக்குவதாக திமுக புதன்கிழமை அறிவித்தது. இதன் மூலம், இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற பல கட்டமாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவந்தன. தற்போது அந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்தன.
முன்பாக அதிக தொகுதிகள் கேட்டு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவுடன் பலகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். மேலும், கூட்டணியில் அதிக கட்சிகள் இணைந்திருப்பதால், எங்களுக்கு அதிக இடங்களை வழங்க முடியாது என்று திமுக எங்களிடம் கூறியது என்றும், ஆனால் பிரச்சினைகள் இருந்தபோதிலும், காங்கிரசுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுக்கும் அதிக இடங்கள் கிடைக்கக்கூடும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இடதுசாரிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்று மாநில செயலாளர் பி. சண்முகம் கடந்த மார்ச் 14ம் தேதி கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை வேகம் எடுத்துள்ளது. அந்த வகையில், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் 4வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் ,முத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டதாக திமுக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறைந்த தொகுதிகளை பெற்றுக்கொள்ள திமுக வலியுறுத்தியதா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், "எப்போதும் உண்மையாகவும், அரசியலாக மட்டும் தான் பேசுவோம். நான்கு கட்ட பேச்சு வார்த்தையில் ஒருபோதும் திமுக நிர்பந்திக்கவில்லை. வேண்டுகோள் தான் விடுத்தார்கள். பல கட்சிகள் சேர்ந்து இருக்கிற காரணத்தினால், நீங்கள் இதை பரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வரே கேட்டிருந்தார். நான்கு கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்த போது ஜனநாயக முறைப்படி அல்லாமல் சுயமரியாதையை எதிராக நடந்து கொண்டிருந்தால் அதிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விலகி சென்றிருக்கும் என்று அவர் கூறினார். இதனையடுத்து பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையேயான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் ஆகியோரால் தற்போது கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது ஐந்து இடங்களில் போட்டியிட உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.