
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் உள்ளிட்ட வீரர்களின் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி, மாவட்ட தலைவர்கள் ரெக்ஸ், கோவிந்தராஜ் , கலை மற்றும் உயிரிழ்ந்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த இரண்டு ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவியாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகையிடம்
காங்கிரஸ் உறவாடி கெடுக்கும் என நயினார் நாகேந்திரன் கூறி உள்ளாரே என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை,
“நாங்கள் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் போது எத்தனை ஆட்சியை கவிழ்த்து இருக்கிறோம். ஆனால் இவர்கள் அருணாச்சல பிரதேசத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் அதை முடக்கினார்கள் . மக்கள் தீர்ப்புக்கு பிறகு எங்களது ஆட்சியை கவிழ்த்தார்கள். கவிழ்த்து குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்தார்கள். வரலாறு தெரியாமல் பாஜக பேசி வருகிறது. அவர் வரலாற்றை படிக்க வேண்டும் என்றார்.
பிளாட்பாரத்தில் உள்ளவர்களுக்கும் ஓட்டுரிமை கொடுத்துள்ளோம், அவர்களுக்கு வீட்டு முகவரி இல்லை என்கின்றனர், ஆனால் மோடி வீடு இல்லாதவர்களே இல்லை என தெரிவித்தார். அவர்கள் பேசுவதை அவர்களே கவனிப்பது இல்லை.
எங்கள் தலைவர் ராகுல்காந்தி ஜனநாயகத்திற்காக தொடர்ந்து குரல்கொடுத்து கொண்டுள்ளார். இந்திய மக்களுக்கு கடைசி நம்பிக்கையாக உள்ளது வாக்குரிமை, அந்த வாக்குரிமையை பறிக்காதீர்கள் என்று மக்கள் முகமாக மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்து வருகிறது.
பாமக -வில் அன்புமணி நீக்கம் குறித்து கேட்ட கேள்விக்கு ?
“அது தந்தை மகனுக்கான பிரச்சனை, உட்கட்சி பிரச்சனையில் நாம் ஒன்றும் கருத்து சொல்வதற்கு இல்லை” என தெரிவித்தார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் 12 பேர் மாற்றி வாக்கு அளித்து உள்ளனரே என்ற கேள்விக்கு?
யார் அப்படி வாக்கு அளித்தார்கள் என தகவல் இல்லை, பத்திரிகையாளர்கள்தான் அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்கள், யார் வாக்களித்து இருக்கிறார்கள், செல்லாத ஓட்டு 14 என கூறுகிறார்கள் அதை நீங்கள் கண்டுபிடித்து தர வேண்டும் என தெரிவித்தார்.
பாஜகவின் கொள்கைக்கு திமுக ஒத்துப் போகிறது என்ற சீமானின் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்த செல்வப் பெருந்தகை,
“நிதி தராத போதிலும் புதிய கல்விக் கொள்கையை திமுக ஏற்றுக் கொள்ளாத நிலையில் பாஜக கொள்கையுடன் திமுக ஒத்துப் போவதாக சீமான் எப்படி சொல்ல முடியும்?
விஜய் காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சனம் வைக்கவில்லை காங்கிரசை கூட்டணிக்கு கொண்டுவர திட்டமா? என்ற கேள்விக்கு
“அது குறித்து எங்களது அகில இந்திய தலைமை தான் தீர்மானிக்கும்.
விஜய் காங்கிரசை விமர்சிக்காததற்கு காரணம் காங்கிரஸ் மேல் ஒரு குற்றமும் இல்லை,காங்கிரஸ் தான் அடிப்படை ஆதாரங்களை மக்களுக்கு வெளிப்படுத்தி உள்ளது” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் காங்கிரசுக்கு ஆதரவான குரலாக விஜய் உள்ளாரா என்பதை அவர் தான் கூற வேண்டும்.
விஜய் பிரச்சாரத்திற்கு திமுக அஞ்சுகிறதா என்ற கேள்விக்கு “ருக்கு யார் அஞ்சப் போகிறார்கள்” என கூறியுள்ளார்.
விஜய் -ன் நிலைப்பாடு
விஜய் கட்சி துவங்கிய நோக்கமே திமுக - அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக நாம் வரவேண்டும் என்பதுதான்… மேலும் திமுக - வை அரசியல் எகிரியாகவும், பாஜக -வை கொள்கை எதிரியாகவும் முன்னிறுத்திய விஜய் அனைத்து கட்சிகளையும் தனது மாநாட்டில் விமர்சித்தார். ஆனால் காங்கிரசை மட்டும் விமர்சிக்காமல் மௌனம் காத்து வருகிறார். இவரின் இந்த மௌனம் பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விஜயுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு “ அகில இந்திய தலைமை தான் தீர்மானிக்கும். எங்கள் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை..ஆகையால் நாங்க விமர்சிக்கப்படவில்லை” என மழுப்பலாக பதில் அளித்திருப்பதும் மேலும் பேசுபொருளாகியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.