சட்டப்பேரவையில் அறிவித்தபடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு...!

சட்டப்பேரவையில் அறிவித்தபடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு...!
Published on
Updated on
1 min read

அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த 8 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையின்போது, அப்போதைய நிதித்துறை அமைச்சர் பிடிஆர், அறிவைப் பரவலாக்கிக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்ப்பதன் மூலமே சமூக நீதித் தத்துவம் முழுமை அடைகிறது, அந்த அடிப்படையில் தலைநகர் சென்னை மட்டுமன்றி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களும், ஐந்து இலக்கியத் திருவிழாக்களும் வெற்றிகரமாக இவ்வாண்டு நடத்தப்பட்டதாகவும், மகத்தான இம்முயற்சியை வரும் ஆண்டில் 10 கோடி ரூபாய் நிதியுடன் தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்த  8 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்குத் தலா 30 லட்சம் ரூபாயும், வேலூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல், நாகர்கோவில், கடலூர், கரூர் மாவட்டங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாயும், மீதமுள்ள மாவட்டங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கண்காட்சியை முறையாக நடத்த ஏதுவாக ஒருங்கிணைப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com