மாற்று வாக்காளர் அடையாள அட்டைகள் இலவசம்... தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு...

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாற்று வாக்காளர் அடையாள  அட்டைகள் இலவசம்... தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு...
Published on: 
Updated on: 
1 min read

இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுரையை செயல்படுத்திடும் விதமாக இந்த அலுவலகம், அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 342 அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும்,  இத்திட்டம் வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com