ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் இன்று அறிவிப்பு வெளியிட உள்ளார்.
ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் :
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த 23 ஆம் தேதி மநீம கட்சியின் தலைவா் கமல்ஹாசனைச் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தாா். அப்போது நிா்வாகிகளுடன் ஆலோசித்து தெரிவிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தாா்.
இதையும் படிக்க : முதலில் ஜெயலலிதா காலில்....தற்போது?!!
இந்த நிலையில், மநீம கட்சியின் அவசர நிா்வாகக்குழு - செயற்குழு கூட்டம் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு எடுக்க கமல்ஹாசனுக்கு முழு அதிகாரம் வழங்கப்படவுள்ளதால், கூட்டத்திற்கு பிறகு கமல்ஹாசன் தனது முடிவை அறிவிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.