
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பணிகள் தொடர்பாக தனது கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு காரில் சென்றபோது அவரை பார்க்க ஏராளமானோர் சாலையில் இரு பகுதிகளிலும் நின்றிருந்தனர். அப்போது வயதான தம்பதியினர் இருவர் முகக்கவசம் அணியாமல் இருந்ததை பார்த்த மு.க.ஸ்டாலின், காரை நிறுத்தத் சொல்லி கீழே இறங்கினார்.அந்த தம்பதிகளிடம் நலம் விசாரித்த முதல்வர், பின்னர் அவர்களிடம் முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். சில முகக் கவசங்களை அவர்களிடம் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு கூறி விட்டு முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.