“கடுப்பான சபாநாயகர்..” - கடைசி நாளில் நடந்த அமளியில்.. கவனம் பெரும் சேகர்பாபு ரியாக்சன்

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து முழக்கமிட்ட நிலையில், சபாநாயகரை நோக்கி நெருக்கமாக சென்றார் திமுக..
“கடுப்பான சபாநாயகர்..” - கடைசி நாளில் நடந்த அமளியில்.. கவனம் பெரும் சேகர்பாபு ரியாக்சன்
Published on
Updated on
2 min read

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இன்று காலை அவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. குறிப்பாக, நேற்று முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் சபாநாயகர் விஜய் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்று தெரிவித்தார். பின்னர் “பேரவை தலைவர் தீர்ப்பளித்த பின்பும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இது போன்று நேற்றும் செய்தார்கள் இன்றும் செய்கிறார்கள் இவர்கள் மீது சட்ட விதிகளின் எடுக்க வேண்டும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார்.

“கொடுத்த தீர்ப்பை நான் மாற்றிக்கொள்ள முடியாது என்றும் நேற்று முதல்வர் விஜய் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க முடியாது” என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார் சபாநாயகர். இதனால் சட்டப்பேரவையில் அமளி ஆனது. சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் கோஷமிட்டனர். இதனால் டென்ஷன் ஆன சபாநாயகர் அவர்களை இருக்கையில் போய் அமருமாரும், ஆரோக்கியமான விவாதங்களை முன் வைக்குமாறு கேட்டு கொண்டார்.

இந்நிலையில் அவர்களை பேரவையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார். அதன் பின்னர் கோவமான சனநாயக உங்களுக்கு ஒரு நிமிடம் அவகாசம் தருகிறேன் அதற்குள் இருக்கையில் போய் அமருங்கள்.. உங்களுடைய கொறடா எ வ வேலு அவர்களை பேச அனுமதிக்கிறேன் என்று குறிப்பிட்டார்.

அப்போதும் அங்கிருந்து நகராத திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து முழக்கமிட்ட நிலையில், சபாநாயகரை நோக்கி நெருக்கமாக சென்றார் திமுக-எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன். தன்னை நோக்கி நெருங்கி வந்த வசந்தம் கார்த்திகேயனை பார்த்து சபாநாயகர் 'Don't come here.. Get out' என்றும் “வெளியே போங்க” என்றும் உச்சக்கட்ட கோபத்தில் எச்சரித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, கோவி செழியன், KN நேரு மற்றும் எ வ வேலு ஆகியோர் சபாநாயகர் முன் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். கூச்சல் குழப்பத்தினால் சபாநாயகர் பேசியது சரியாக கேட்கத்தத்தினால் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு அருகில் சென்று கூர்ந்து கவனித்தார். அந்த காட்சிகள் நகைச்சுவையாக சித்தரித்து தற்போது வைரலாகி வருகிறது.

நிலைமை கட்டுக்கடங்காததைத் தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவைக் காவலர்கள் உள்ளே வந்து சில திமுக உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துச் சென்றனர். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் ஏற்பட்ட இந்த அமளி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com