வேளாங்கண்ணி அருகே வடிவேலு பட பாணியில் திருட்டு... களத்தில் இறங்கிய முதியவர்!!

வேளாங்கண்ணி அருகே வடிவேலு பட பாணியில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற முதியவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்போரை வியக்க வைத்துள்ளது.
வேளாங்கண்ணி அருகே வடிவேலு பட பாணியில் திருட்டு... களத்தில் இறங்கிய முதியவர்!!
Published on
Updated on
1 min read

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பூவைத்தேடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

பைக் வாங்க வந்த முதியவர்:

65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மூர்த்தியின் கடைக்கு வந்துள்ளார். கடைக்கு வந்த முதியவர் ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்-ஐ ஒட்டி பார்த்து விட்டு வருவதாக கூறியுள்ளார்.

வடிவேலு பட பாணியில் திருட்டு:

இதனை தொடர்ந்து, மூர்த்தி வழக்கம் போல் பைக்-கின் சாவியை எடுத்து கொடுத்துள்ளார். முதியவரும் பைக் சாவியை வாங்கி விட்டு வண்டியை எடுத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் இருசக்கர வாகனம் திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி (மூர்த்தி MIND VOICE: டேய் எண்ணெங்க டா வடிவேலு பட காமெடி மாதிரி திருடிரிங்க) இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து புகார் அளித்துள்ளார். வடிவேலு பட பாணியில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரால் வேளாங்கண்ணியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com