“அன்புமணியும் ராமதாசும் நாடகமாடுகின்றனர்” - காடுவெட்டி குருவின் மகள் பகீர்!!!

பணத்திற்கும், பதவிக்காகவும் இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். 20 ஆண்டுகாலமாக பாட்டாளி மக்கள் கட்சி ...
kaduvetti guru's daughter
kaduvetti guru's daughter
Published on
Updated on
1 min read

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மற்றும் அவரது கணவர் கிரண் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். 

பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் சண்டை போடுவது போல் நாடகம் போடுகின்றனர். குடும்பத்து பெண்கள் அரசியலுக்கு வரக்கூடாது என ராமதாஸ் பிற்போக்குத்தனமாக பேசினார். ஆனால் தற்போது தன்னுடைய மகளையே  அரசியலில் முன்னிறுத்தி உள்ளார்.  இவர்கள் பணத்திற்காகவும் பதவிக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்  என்று தெரிகிறது.

பணத்திற்கும், பதவிக்காகவும்  இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். 20 ஆண்டுகாலமாக  பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வன்னிய சமுதாய மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை.

10.5 சதவீதம் முடிந்து போன கதை என எடப்பாடி, ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டை 3 கட்சிகள் ஆண்டு கொண்டு இருக்கிறது... அதிமுக, திமுக, காங்கிரஸ்..10.5 % அதிமுக முறையாக கொடுத்து இருந்தால் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருப்போம். 10.5% எங்களுடைய தன்மான பிரச்சனை... 10.5% ஒதுக்கீட்டை  யார் எங்களுக்கு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு நாங்கள் ஆதரித்து தெரிவிப்போம்.  அது அதிமுகவாக இருந்தாலும் சரி திமுகவாக இருந்தாலும் சரி என்றார். 

ராமதாஸ் தன்  குடும்பத்தை  மீறி அந்த கட்சி செயல்படக்கூடாது என நினைக்கிறார். சுயலாபத்திற்காக தான் கட்சியை நடத்துகிறார்கள் வன்னிய சமுதாயத்திற்காக எந்த நலனும் செய்யவில்லை. தியாகிகளுக்கான மணிமண்டபம், ஓய்வூதியம் வேலை வாய்ப்பு என திமுக ஆட்சியில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியதற்காக நாங்கள் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளோம் என கூறினார். 

மேலும், தனியாக அமைப்பு உருவாக்க உள்ளோம். எங்களுடைய அமைப்பு வரும் தேர்தலில் வன்னிய சமுதாயத்திற்கு ஆதரவாக செயல்படும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும்.

புதிதாக அமைப்பு உருவாக்கி வரும் தேர்தலில் போட்டியிட உள்ளோம்.. பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள  2-ஆம் கட்ட தலைவர்கள் என்னிடம் பேசி கொண்டு தான் இருக்கிறார்கள் எனவும் அவர்  தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com