“என் எதிரிகள் கூட இவ்வளவு மோசமா நடந்துக்கல..” பொய்களின் மறு உருவம் தான் அன்புமணி!! - ராமதாஸ் குமுறல்!!

நான் பொது வெளியில் பேசுகிறேன் என கூறுகிறார்கள், ஆனால் நான் என் கட்டுக்கடங்காத மன குமுறல்கள் ஊடக நண்பர்களிடம் பகிர்கிறேன்...
clash between son and father
clash between son and father
Published on
Updated on
3 min read

பாட்டாளி மக்கள் கட்சி ஒரு காலத்தில் தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக இருந்தது. ஆனால் தற்போது தனது கட்சி அதிகாரத்தையே இழந்துவிடும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு காரணம் வாரிசு அரசியல் தான் என்பதை நாடறிந்த உண்மை. தனது அரசியல் வாரிசாக அன்புமணியை உருவாக்கிய ராமதாஸ், மகன் ஒருகட்டத்தில் தன்னை தாண்டி சென்று விடுவார் என்பதை உணராமல் இருந்தது தான் இதற்கு காரணம்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும்  பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார், இந்நிலையில் சமீபத்தில் அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற  பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார். 

இது பாமக -வில் பெரும் பதட்டத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே 16 கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை. 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு  திண்டிவனம் ஓமந்தூரார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அன்புமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நிறுவன தலைவருக்கு கட்டுப்படாமல் அன்புமணி செயல்படுவது கண்டிக்கத்தக்கது என பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சச்சரவுகளுக்கு இடையில் சமீபத்தில்  தந்து “தனது வீட்டில் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒட்டுக்கேட்கும் கருவி ரகசியமாக பொருத்தப்பட்டிருந்தததாகவும், தமது இருக்கையின் கீழ் இருந்த அந்த கருவியை சில தினங்களுக்கு முன்புதான் அப்புறப்படுத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். 

கடந்த வாரம் மீண்டும்  பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுவின் தைலாபுரம் தோட்டத்து சிசிடிவி காட்சிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு ராமதாஸ் சார்பில் சைபர் க்ரைமில் புகார் அளித்திருந்தனர்.. ராமதாசை யாரெல்லாம் சந்திக்கின்றனர் என்ற விவரத்தை சட்ட விரோதமாக சிசிடிவி மூலம் அன்புமணி  கண்காணித்துள்ளதாக குற்றச்சாட்டை ராமதாஸ் தரப்பு முன்வைத்துள்ளது. மருத்துவர் ராமதாஸ் -ன் தொலைபேசி உரையாடலும் கடந்த 3 ஆண்டுகளாக ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகவும்  புகார் அளித்திருந்தனர். 

தொடர்ந்து 9 ஆம் தேதி அன்புமணி பொதுக்குழு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார், ஆனால் ராமதாஸ் தரப்பில் ஏற்கனவே 17 -ஆம் தேதி பொதுக்குழு நடக்கும் என சொல்லப்பட்டிருந்தது, இந்நிலையில் இந்த அறிவிப்பு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. “அவர் எப்படி பொதுக்குழு நடத்த முடியும். நான்தான் அவருக்கு அழைப்பே விடுக்க முடியும், பாமக சட்ட விதிகளின் படி அதற்கு இடமே இல்லை. அவர் பொதுக்குழு நடத்தினால் அது தேவையற்ற வன்முறைக்கு வழி வகுக்கும், எனவே நாங்கள் அதை சட்ட ரீதியாக அணுகுவோம் என ஏற்கனவே ராமதாஸ் பேசியிருந்தார்..

அதன்படி, அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டுமென ராமதாஸால் நியமிக்கப்பட்ட  மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே மாதம் 28 -ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. 

புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு கடந்த மே மாதம் 30 -ம் தேதியில் இருந்து அவர் தலைவராக செயல்பட்டு வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநில தலைவரின் பதவிக்காலம் முடிவடைந்தால் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மற்றும் கட்சி நிர்வாக பொறுப்பு உள்ளிட்டவை கட்சியின் நிறுவனருக்கே உள்ளது,  என கடந்த ஜூலை ஏழாம் தேதி நடைபெற்ற மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் 

இந்நிலையில் வியாழக்கிழமையான  இன்று மீண்டும் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து உள்ளார். அப்போது பேசிய அவர் “அன்புமணி நிறைய பொய்களையும் கட்டுகதைகளையும் கட்சி  தொண்டர்கள் மத்தியில் பரப்பி வருகிறார்.  அவர் என்னை தைலாபுரத்தில் சந்திக்க வந்ததாகவும், நான் கதவை சாத்தி கொண்டு பேச மறுத்தாக கூறி வருகிறார். நான் ஏன் அப்படி செய்ய வேண்டும்? 

46 ஆண்டு காலம் கட்டி காப்பாற்றிய கட்சியை அன்புமணியிடம் ஏன் கொடுக்க வேண்டும்? கட்சி நிர்வாகிகளை யாரும் நான் சந்திக்க கூடாது என அன்புமணி கூறுகிறார்.

அன்புமணி மூலமாக சமாதனாம் பேச வந்த அதிமேதாவிகளிடம், “கடைசி பேச்சு வார்த்தையின் போது தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என கூறி அனுப்பிவிட்டேன்”சமீபகாலமாக அவர் தனது தாயை மட்டும் சந்தித்து செல்வார். என்னை சந்திக்க மாட்டார், கேட்டால் நான் சந்திக்க அனுமதிக்கவில்லை  என பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவார்.

வர கூடிய சட்டமன்ற தேர்தலை  நான் தலைமை ஏற்று நடத்த முடிவெடுத்தேன். இதற்கு அன்புமணி முடியாது என கூறினார், மேலும் “ நான் தான் வேட்பாளர் தேர்வு செய்வேன் , நான் தான் கூட்டணி பேசுவேன்” என அன்புமணி கூறியபோதுதான்  தான் முதல் பிரச்சினை எழுந்தது”  அதே போல் கட்சி நிர்வாகிகளை  நான்தான்  நியமனம் செய்வேன் என கூறினார், என்னை அதிகாரம் செய்ய அன்புமணிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர்,நிறுவனரான நான் தைலாபுரம் கேட்டை முடிக்கொண்டு கொள்ளு பேரன்கள் உடன் விளையாடிக்  கொண்டிருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். கடைசி மூச்சு வரை நான் என் பாட்டாளி சொந்தங்களை சந்தித்து கொண்டிருப்பேன். நான் கட்சியை பார்த்து கொண்டுஇருக்கிறேன், நீ போய் மக்களை சந்தித்து வா என கூறிவருகிறேன்.

என் பாட்டாளி சொந்தங்கள் என்னை நிறுவனராக பார்க்க மாட்டார்கள், என்னை கடவுளாக பார்பார்கள், அப்படி பார்பவர்களை எல்லாம் அவர் இழுத்து கொண்டார். அவர்களிடம் தன்னால் தான் எம்.எல்.ஏ ஆக்க முடியும் என பல பொய்களை சொல்லி சேர்த்து வைத்துள்ளார்.

தருமபுரியில் அன்புமணியை எம்.பி ஆக்கிய உடன் அவர் கட்சியை தன் பக்கம் மறைமுகமாக இழுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார், என கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் எனக்கு தெரியவந்தது. பணத்தை வைத்து பொறுப்பாளர்களை விலைக்கு வாங்குவது, கட்சி வளர்ச்சிக்கு எந்த கருத்து சொன்னாலும் கேட்பதில்லை. அன்புமணி மேல் நான் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் என்னால் உருவான கட்சியை நான் அழிக்க விரும்பவில்லை.

அதனால் தான் செயல் தலைவராக செயல்பட கூறுகிறேன். அன்புமணி கட்சிகாக எதுவும் செய்யவில்லை.. கட்சியின் உள்ள பிள்ளைகளை, தம்பிகள், தங்ககைகள் என எல்லோரையும் நான் நன்றாக வளர்த்தேன்.குடும்ப பாசம் எப்படி இருக்குமோ அது போன்று கட்சியை வளர்த்தேன், வளர்த்து வருகிறேன். ஆனால் அவர் காசை கொடுத்து கட்சி காரர்களை விலைக்கு வாங்குகிறார். 

பல கார்களை பின்னால் வர வைத்து ஊர் ஊராக சுற்றி வருகிறார். ஆனால் நான் அவரை வீடுவீடாக கிராமம் கிராமமாக சென்று சந்தித்து வர கூறினேன் அதை அவர் செய்யவில்லை.

நீங்கள் கேட்கலாம் அன்புமணி என்னை பொதுவெளியில் பேசுவது இல்லை என்று, ஆனால் அவர் அமைதியாக இருந்து நாடகம் நடத்தி வருகிறார்.  நான் பொது வெளியில் பேசுகிறேன்  என கூறுகிறார்கள், ஆனால் நான் என் கட்டுக்கடங்காத மன குமுறல்கள் ஊடக நண்பர்களிடம் பகிர்கிறேன்.

எனது எதிரிகள் கூட என் மீது கேவலமான விமர்சனங்களை வைத்ததில்லை. ஆனால் அன்புமணி அமைதியாக இருந்து கொண்டு சமூக வலைதளங்களில் என்மீது கேவலமான விமர்சனங்களை வைத்து வருகிறார்.

கட்சி இரண்டாக இருப்பது போல் அன்புமணி ஒரு பிம்பத்தை உருவாக்கி வருகிறார். ஆனால் கட்சி ஒன்றாக தான் உள்ளது. 17 ஆம் தேதி கட்சியின் பொதுக்குழு  நடைபெறும். குடும்பம் 40 பேர் கொண்டதாக இருந்தது பத்தாக மாறியுள்ளது. குடும்பத்திற்குள்ளாகவே விளையாடி கொண்டிருக்கிறார்.  பொதுக்குழு அறிவித்தவுடன் போட்டியாக அன்புமணியும்  பொதுக்குழு அறிவிக்கிறார். நான் வளர்த்த பிள்ளைகளை என்ன திட்டுவதற்கு காசு கொடுத்து மாற்றி உள்ளார்.  நான் வளர்த்த பிள்ளைகளை எனக்கு எதிராக மிரட்டி செயல்பட வைக்கிறார் அன்புமணி. பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணனை  மந்திரம் மாயம் போட்டு இனோவா கார் வாங்கி கொடுத்து அன்புமணி மாற்றியுள்ளார்.   நல்ல பேச்சாளர் நல்ல சிந்தனையாளர் வடிவேல் ராவணனுக்கு காரை வாங்கிக் கொடுத்து வளைச்சி போட்டிருக்கிறார்" என பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com