
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாட்டாளி மக்கள் கட்சிசார்பில் 18ம் ஆண்டு வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டார்.
பாமக வெளியிட்ட வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையின் வெளியிட்டு பேசியது,
2025-2026 ஆம் நிதி ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் 85 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக இருக்க வேண்டும் எனவும், தமிழகத்தின் மொத்த நிதிநிலை அறிக்கை மதிப்பின் 25 சதவீதத்தை வேளாண் பட்ஜெட் கொண்டிருக்க வேண்டும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 3500 கரும்புக்கு டன்னுக்கு 5000 ரூபாயாகவும் உயர்த்தப்பட வேண்டும். வேளாண் விளைவு பொருட்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம் ஏற்படுத்த வேண்டும். நியாய விலை கடைகளில் நாட்டுச் சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும்.
விலங்குகள் தாக்கி உயிர் இழப்புகளுக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சிப்காட் கூலிப்பேட்டைகளுக்கு இளங்கலை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும், விளை நிலங்களை அழித்து தொழிற்சாலைகள் கட்டுவது வளர்ச்சி கிடையாது ஒரு மாநிலம் ஆறு சதவீத வேளாண் வளர்ச்சியை கொண்டிருந்தால்தான் அது வளர்ச்சி பெற்ற மாநிலமாக பார்க்கப்படும்.
விளைநிலங்களை அழித்ததன் பிறகு எதிர்கால சந்ததியினர் சோற்றிற்கு என்ன செய்வார்கள். அமைச்சர் எ வ வேலு அவர்கள் சிப்காட் அமைப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கிறார் அவரது பேரன்களுக்கு சொத்து உள்ளது அவர்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை ஆனால் நமது மக்கள் எங்கே செல்வார்கள் உணவுக்கு என்ன செய்வார்கள். பிச்சை எடுப்பார்களா என கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் மணல் குவாரிகளுக்கு தடைவிதிக்க வேண்டும். மணல் தேவை ஏற்பட்டால் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்து விற்பனை செய்யலாம்.
வேளாண் துறை மூன்றாக பிரிக்கப்பட்டு வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம்& சந்தைப்படுத்துதல் ஆகிய அமைச்சகங்கள் உருவாக்கப்படும்.
வேளாண் துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 82 தலைப்புகளில் 240 யோசனைகளை தமிழக அரசு தெரிவித்திருப்பதாகவும், இவற்றை பாமகவின் திட்டங்களாக கருதாமல் வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி சாத்தியமானவற்றை மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் ஐந்தாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசியது,
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, கஞ்சா ஒழிப்பு, கள்ளச்சாரத்தை ஒழிப்பது என காவல்துறை இன்று தன் வேலைகளை விட்டுவிட்டு ,அரசியல் கட்சித் தலைவர்களை துன்புறுத்துவது ,பொய் வழக்குகள் போடுவது என செயல்படுகிறது.
கடந்த மாதத்தில் எத்தனையோ பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்கள்.
பள்ளிகளில், கல்லூரிகளில் குழந்தைகள், பெண்கள் ஐந்து வயது ,ஏழு வயது என பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இது பற்றி கேட்டால் இது தனிப்பட்ட சம்பவம் என காவல்துறை விளக்கம் கொடுக்கிறது. பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் அவன் கதை முடிந்தது என்ற பயம் ஏற்படும் வகையில் காவல்துறை செயல்பட வேண்டும்.
தவறு செய்வதற்கு காரணம் போதை பொருள்கள் தான், கஞ்சா புழக்கம் தமிழக முழுவதும் பரவி கிடக்கிறது.
காவல்துறை முதலமைச்சர் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது? ஏன் கஞ்சாவை ஒழிக்க முடியவில்லை.
என்னிடம் ஒரு மாதத்திற்கு காவல்துறையின் கண்ட்ரோலை கொடுங்கள் கஞ்சாவை முழுமையாக ஒழித்துக் காட்டுகிறேன்.
நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை குறித்த கேள்விக்கு,
தொகுதி மறு வரையறை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வருவதாக நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் 30 சதவீதம் உயர்த்தினால் தமிழகத்திலும் 30% உயர்த்த வேண்டும். நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை தமிழகத்தில் குறையாது என வாக்குறுதி கொடுத்துவிட்டு வேறொரு மாநிலத்தில் உயர்த்தினால் அதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.