“என் தலைவர் பதவியை பறிப்பதே அன்புமணி நோக்கம்..! என் மகனை தலை முழுகிட்டேன்..! ராமதாஸ் பரபரப்பு பேட்டி!!

மேலும் 3 ஆண்டுகளாக என்னை வேவு பார்க்கிறார். இதெல்லாம் நியாயமா சொல்லுங்கள். இதுவரை அந்த குற்றச்சாட்டை மறுத்தாரா..?
ramadoss
ramadoss
Published on
Updated on
2 min read

பாமக -வில் தந்தை மகன் மோதல் வலுத்து வருகிறது.   சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை கூட்டி, அன்புமணியை எம்.பி ஆக்கி பெரும் தவறிழைத்து விட்டேன். அவர் முகுந்தன் நியமன விவகாரத்தில் தன் தாயையே பாட்டிலை தூக்கி அடிக்க சென்றவர். கட்சி இன்று இந்த நிலைமைக்கு இருப்பதற்கு காரணம் அவரிடம் தலைமைப்பண்பு இல்லாததுதான் என்ற  பரபரப்பு குற்றச்சாட்டை சொல்லியிருந்தார். 

இது பாமக -வில் பெரும் பதட்டத்தையும், கட்சியின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் இவர்களுக்கு இடையேயான இந்த மோதல் போக்கு நிச்சயம் கட்சியை சீர்குலைக்கும் என்று தெரிந்த நலம் விரும்பிகள் பலர் தைலாபுரத்துக்கும், பனையூருக்கும் இடையே எத்தனையோ கட்ட சமரச செயலில் ஈடுபட்டனர். ஆனால் எதுவும் எடுபடவில்லை. 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு  திண்டிவனம் ஓமந்தூரார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அன்புமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நிறுவன தலைவருக்கு கட்டுப்படாமல் அன்புமணி செயல்படுவது கண்டிக்கத்தக்கது என பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சச்சரவுகளுக்கு இடையில் சமீபத்தில்  தந்து “தனது வீட்டில் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒட்டுக்கேட்கும் கருவி ரகசியமாக பொருத்தப்பட்டிருந்தததாகவும், தமது இருக்கையின் கீழ் இருந்த அந்த கருவியை சில தினங்களுக்கு முன்புதான் அப்புறப்படுத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். 

கடந்த வாரம் மீண்டும்   பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுவின் தைலாபுரம் தோட்டத்து சிசிடிவி காட்சிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு ராமதாஸ் சார்பில் சைபர் க்ரைமில் புகார் அளித்திருந்தனர்.. ராமதாசை யாரெல்லாம் சந்திக்கின்றனர் என்ற விவரத்தை சட்ட விரோதமாக சிசிடிவி மூலம் அன்புமணி  கண்காணித்துள்ளதாக குற்றச்சாட்டை ராமதாஸ் தரப்பு முன்வைத்துள்ளது. மருத்துவர் ராமதாஸ் -ன் தொலைபேசி உரையாடலும் கடந்த 3 ஆண்டுகளாக ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகவும்  புகார் அளித்திருந்தனர். 

இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில் பாமக -வின் மகளிரணிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன, இது முடிந்த உடனேயே பொதுக்குழு கூட்டப்பட்ட உள்ளது.  இந்நிலையில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கருக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் தன் மகனுக்குமான உறவு பற்றி பல திடுக்கிடும் தகவல்களை பகிர்ந்துள்ளார்,  அன்புமணி மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டே, களத்தில் வேலை பார்க்கவில்லை, கிராமம் கிராமமாக செல்லவில்லை என்பதுதான் ஆனால் தற்போது அவர்தான் உரிமை மீட்பு பயணம் செய்கிறாரே என கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்த ராமதாஸ் “ இது உரிமை மீட்பு பயணம் அல்ல… என்னோடு இருக்கும் மக்களை பிரித்து, கட்சியை உறிஞ்சும் செயல், ஒருவேளை அவர் எதையாவது சாதிப்பதாக இருந்தால் அதை எப்போதோ செய்திருக்கலாம். என்னிடம் உள்ள தலைவர் பதவியை பறிக்க 16 பஞ்சாயத்துகள் நடந்தது, நான் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. நான் இந்த வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என்பதுதான் பஞ்சாயத்து பன்னவர்களின் கோரிக்கை. நான் பார்த்து பொறுப்பு கொடுத்தவர்கள் எல்லாம் பஞ்சாயத்து எனக்கு வந்து பஞ்சாயத்து செய்தார்கள். 16 ஆவது பஞ்சாயத்து நடந்த அன்று நான் வேலைகளை முடித்து வீடு திரும்பினேன், அன்புமணி, என் பேத்திகள் என் மகள்கள் அனைவரும் இருந்தனர்,  நானா அன்புமணியை பார்த்து “ போடா வெளியே என்றேன்.. உடனே இது எங்க அம்மா கட்டின வீடு என்றான்.. நான் உள்ளே சென்று ஒரு குடம் தண்ணீரை எடுத்து என் தலையில் ஊற்றிக்கொண்டு அவனை தலை முழுகினேன். 8 மணியிலிருந்து 2 மணி வரை அழுதேன். அவன் போன பிறகு தான் வெளியிலே வந்தேன். 

இன்னொரு சம்பவம் முகுந்தன் நியமனத்தின்போது நான் சொல்லித்தான் அறிவித்தேன், உனக்கு துணையாக நான் முகுந்தனை இளைஞரணி செயலாளராக ஆக்குகிறேன் என்று, ஆனால் மைக்கை போட்டு உடைத்து, காலை ஆட்டிக்கொண்டு மோசமாக நடந்து கொண்டான்.

பொங்கல் விழாவின்போது எல்லோரும் கூடியிருந்த நேரத்தில் என் பெரிய மகளிடம் உன்னால் காட்சியிலும், குடும்பத்திலும் பிரச்னை என மோசமாக பேசினான், என் மகள் உடனே தலையில் அடித்துக்கொண்டு அழ துவங்கிவிட்டான், அப்போது அவனிடம் ஒன்றுதான் கூறினேன் “யோக்கியனுக்கு பிறந்த அயோக்கியன் நீ என்று”. 46 ஆண்டுகள் உழைக்கிறேன்.. 96,000 கிராமங்களுக்கு நான் சென்று பணிபுரிந்திருக்கிறேன், ஆனால் அணைத்து அதிகாரங்களும் தனக்கே வேண்டுமென்று யோசிக்கிறார். மேலும் 3 ஆண்டுகளாக என்னை வேவு பார்க்கிறார். இதெல்லாம் நியாயமா சொல்லுங்கள். இதுவரை அந்த குற்றச்சாட்டை மறுத்தாரா..? இல்லை.  மேலும் அன்புமணியை இயக்குவது அவரது மனைவி, மாமனார், மச்சான் தான். மேலும் அன்புமணி -ன் செயல் தலைவர் பதவியை பறிக்கலாமா என்று யோசிக்கிறேன். ஏனெனில் இது நான் வளர்த்தெடுத்த கட்சி அவர் தலைவராக விரும்பினால் தனியாக ஒரு கட்சியை உழைத்து உருவாக்கு, எதற்கு என்னிடம் மல்லுக்கட்ட வேண்டும். 17 -ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தி கூட்டணி பற்றி முடிவு செய்வோம்” என பேசியிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com