தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டெய்சி என்ற அங்கன்வாடி பணியாளர், “ஒன்றரை வருடமாக ஆண்டிப்பட்டி வட்டார மேற்பார்வையாளராக செயல்பட்டு வரும் முருகேஸ்வரி.
மாதம் முதல் தேதி வந்தால் எல்லா அங்கன்வாடி கிளைகளில் இருந்தும் 100 ரூபாய் லஞ்சமாக பெற்று தர கோரியும், மேலும் அங்கன்வாடி மையங்களுக்கு மேற்பார்வைக்கு செல்லும் போது அங்கன்வாடி பணியாளர்களிடம் 500 முதல் 1000 ரூபாய்வசூலிக்கிறார், கொடுக்க மறுக்கும் பணியாளர்களிடம் “உங்கள வேலையை விட்டு தூக்க எனக்கு எல்லா அதிகாரமும் இருக்கு நானே மெமோ எழுதி கொடுத்துடுவேன்” என மிரட்டுகிறார்
மேலும் முருகேஷ்வரியுடன் சேர்ந்து, இப்போது மேற்பார்வையாளராக வந்துள்ள சுமதி என்பவரும் எங்களை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார், மேலும் ஆதரவற்று வறுமையில் வாடும் அங்கன்வாடி பணியாளர்களை தேர்ந்தெடுத்த அவர்களிடம் இந்த தொழிலில் ஈடுபட்டால் நிறைய பணம் கிடைக்கும்.
அந்த பணத்தில் நீங்கள் பாதி நான் பாதி என பிரித்து கொள்வோம்” என ஆசை வார்த்தைகளை கூறி மூளைச்சலவை செய்து பெரும் நாசகரமான செயலில் ஈடுபடுவதாகவும், இவர்கள் சொல்வதற்கு எதிராக நடந்து கொள்ளும். அங்கன்வாடி பணியாளர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை இருவரும் சேர்ந்து மேற்கொள்வதாகும், குற்றம் சாட்டியுள்ளார்” மேலும் “இது குறித்து இரண்டு முறை பெட்டிஷன் போட்டுள்ளோம். ஆனால் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை” எனவும் டெய்சி வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பேசிய அவர், “ இதனை கண்டித்தே இன்று நாங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றிருக்கிறோம் . சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநில அளவிலான போராட்டத்தை நடத்துவோம்” எனவும் அறிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்