
கடம்பத்தூரில் உள்ள பரிசுத்த மெய் தேவாலயத்தில் தாஸ் என்பவர் மதபோதகராக உள்ளார். பெண்களிடம் தாஸ் அத்துமீறுவதாகவும் தேவாலய கணக்குகளை சரிவரக் காட்டாமல் மறைப்பதாகவும் இவருக்கும் சார்லஸ் என்பவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் இரவு நேரத்தில் இரும்பு ராடு, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் சார்லஸ் வீட்டில் நுழைந்த தாஸின் அடியாட்கள், மனைவி, மகள் மற்றும் மகனை கடுமையாக தாக்கினர். தலையில் பலத்த காயங்களுடன் சார்லஸின் மனைவி மற்றும் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் சார்லஸ் தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.