
தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களாக உடல்நிலைக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யவுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை காலை வழக்கம்போல் நடைப்பயிற்சியின் போது அவருக்கு திடீரென லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து, உடனடியாக அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டிருந்தது. இதையடுத்து கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அவரை சந்தித்து நலன் விசாரித்து வருகின்றனர்.
அவர் மருத்துவமனையில் இருந்தபடியே கோப்புகளை சரிபார்த்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.