இன்று நடைபெற்ற தவெக 2ம் ஆண்டு துவக்க விழா பற்றி செய்தியாளர் சந்திப்பின் போது அண்ணாமலை கூறியவை,
கெட் அவுட் என கையெழுத்து இயக்கம் ஆரமித்து ஒரு நிமிடத்தில் பிரசாந்த் கிஷோர் கையெழுத்து போடவில்லை என தெரிவித்தார்.
கோவையில் புதிய கட்டிடம் திறப்பு விழா நிறைவு பெற்றபின் , புதிய பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொகுதி வரையறை குறித்து மேடையில் தெளிவாக அமித்ஷா சொல்லி இருக்கின்றார் எனவும், தொகுதி வரையறை குறித்து தவறான தகவலை முதல்வர் தெரிவிக்கலாமா ? என்பதை மக்கள் மன்றத்தில் வைக்கின்றோம் என தெரிவித்தார்.
தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு 5 மடங்கு உயர்ந்து இருக்கின்றது என தெரிவித்த அவர், தமிழகத்திற்கு நிதி கொடுக்கவில்லை என்று சொல்வது தவறு எனவும் தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மத்திய ,மாநில அரசுகள் இரண்டையும் குறை சொல்லி இருக்கின்றார் எனக்கூறிய அவர், உங்க குழந்தைக்கு 3 மொழி, தவெக தொண்டர்களின் குழந்தைகளுக்கு மட்டும் இரண்டு மொழியா? என கேள்வி எழுப்பினார்.
கெட் அவுட் என கையெழுத்து இயக்கம் ஆரமித்து ஒரு நிமிடத்தில் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கையெழுத்து போடவில்லை, பிரசாந்த கிஷோரின் நடவடிக்கை காட்டி கொடுத்து விட்டது என தெரிவித்த அவர்,பிரசாந் கிஷோருக்கு ஒரு கேள்வி, எதற்காக திமுகவை ஆட்சியில் உட்கார வைத்தீர்கள்? தமிழக மக்கள் இதற்காக உங்களை மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
தவெக நிகழ்வில் செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கின்றோம் என தெரிவித்த அவர், சிஆர்பிஎப் பாதுகாப்பை பயன்படுத்துங்கள், அவர்கள் பயிற்சி பெற்றவர்கள் என தெரிவித்தார். பவுன்சர்களுக்கு யாரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து எதற்காக திமுக வெளியே போக வேண்டும் என்பதை அமித்ஷா தெளிவாக சொல்லி இருக்கின்றார் என தெரிவித்த அவர்,பா.ஜ.கவுடன் ஒருமித்த கருத்தோடு கூட்டணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
கூட்டணியில் முதல்வர் யார் என்பதை சொல்ல நேரமும் காலமும் இருக்கின்றது என தெரிவித்த அவர், திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும், தேஜகூ ஆட்சி அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் கிடையாது என விஜய் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, தவெக தலைவர் விஜய் கருத்து என்பது எல்லா இடத்திலும் பொருந்தாது எனவும், சித்தாந்தங்கள் வேறு வேறான கட்சிகள் எப்போதும் ஒன்றாக இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
கோவைக்கு NIA கொண்டு வருவது குறித்து பரிசீலனையில் இருக்கின்றது என தெரிவித்த அவர்,பஞ்சாலை தொழில்களில் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
பாரத்டெக்ஸ் கண்காட்சி கோவையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அமைச்சரிடம் வைப்போம் எனவும் தெரிவித்தார். தமிழக கல்வி அமைச்சர் பேட்டை ரவுடி மாதிரி பேசினார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் கரூர் கூட்டத்தில் பேசினேன் என தெரிவித்த அவர்,கெட் அவுட் மோடி என்பதற்கு கெட் அவுட் ஸ்டாலின் என பதில் அளித்தோம் எனவும்,திமுகவை விட ஒரு படி மேல் சென்று திமுகவிற்கு பதில் அளிக்கின்றோம் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.