தமிழ்நாட்டிற்கு 11 மருத்துவ கல்லூரிகளை கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 6 முறை ஆட்சியில் இருந்த திமுகவினர், 5 மருத்துவ கல்லூரிகளை மட்டுமே திறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டதாவது:-
“தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை வழங்கியவர் நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் என்பதை தமிழக முதல்வர் நினைவுக்கூர விரும்புகிறோம். கடந்த ஆண்டு, திமுக எம்பி டிஆர் பாலு, தமிழகம் 11 மருத்துவக் கல்லூரிகளை “வெள்ளித் தட்டில்” பெற்றதாகக் கூடக் கூச்சலிட்டார். தி.மு.க.ஆட்சியில் 6-வது முறையாக இருந்தும், வெறும் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே திறந்துள்ளது. இது உங்கள் மரபு, தயவு செய்து முதலைக் கண்ணீர் சிந்துவதை நிறுத்துங்கள்”, என சாடியுள்ளார்.
மேலும், சந்தேகத்திற்கு இடமின்றி, தமிழ்நாட்டில் சிறந்த சுகாதார உள்கட்டமைப்பு உள்ளது. ஆனால் இந்த வெற்றிக்கு தி.மு.க. பங்களிப்பு மிகக் குறைவு எனவும், தமிழக முதல்வர் அவர்களின் ஒரே பங்களிப்பு சமீபத்தில் திமுக அமைச்சர் எ.வ.வேலுவின் தனியார் மருத்துவ கல்லூரி திறப்பு விழா தான் எனவும் விமர்சித்டுள்ளார்.
தமிழக முதல்வரின் இந்த மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை மற்ற திமுக அமைச்சர்களும் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்ட திட்டமிட்டு உள்ளார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது எனவும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மாநில அரசு தனது கடந்த கால பெருமைகளை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, சென்னையை தாண்டி சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்”, என பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிக்க |