"நாங்குநேரி சம்பவம் நடந்த பிறகும், முதல்வர் வீட்டில் படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்" அண்ணாமலை பேச்சு!!

"நாங்குநேரி சம்பவம் நடந்த பிறகும், முதல்வர் வீட்டில் படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்" அண்ணாமலை பேச்சு!!
Published on
Updated on
1 min read

ஆளுங்கட்சியாக இருக்கும் போது முதலமைச்சர் எதிர்கட்சி போல் செயல்படுவது சரியா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்

என் மண் என் மக்கள் பாதயாத்திரை துவங்கியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் யாத்திரை மேற்கொள்கிறார். 

அப்பொழுது மக்களிடம் பேசிய அவர், "இந்த நன் நாளில் மகிழ்ச்சி அனைவருக்கும் இருக்க வேண்டும். நாம் மிகப்பெரிய உயரத்தை எட்டிக்கொண்டு இருக்கின்றோம். 2047ல் இந்தியா வல்லரசாகும் என்ற பாரத பிரதமர் கனவு நிறைவேற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "எல்லா தரப்பு மக்களும் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவம் படித்து வருகிறார்கள் , புள்ளிவிவரங்களை திமுக வெளியிட்டு நீட் யாருக்கு எதிரானது என்பதை விளக்க வேண்டும். ஆளும்கட்சியாக திமுக வந்த பிறகும் முதல்வர் இதனை வைத்து அரசியல் செய்கிறார். இதனால் மாணவர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்படுகிறது. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக எதிர்க்கட்சி போல் நடப்பது சரியா ?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "சாதிய வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உருவாக்க வேண்டும். சமூகத்தில் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும். திமுக அமைச்சர்களே பல இடங்களில் ஜாதி வன்மத்தை கடைப்பிடிக்கிறார்கள். வன்மத்தை தூண்டும் பல படங்களை எடுக்கிறார்கள். ரெட் ஜெயின்ட் மற்றும் உதயநிதி ஆகியோர் சாதிய படம் எடுக்கிறார்கள். இதை பிஞ்சு நெஞ்சங்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள். படம் சமூக அக்கரையில் எடுப்பது வேறு, சமூக தாக்கத்தை படம் எடுப்பது வேறு, வன்முறையை தூண்டுவது போல் எடுப்பது வேறு. இதனை முதல்வர் பாராட்டுகிறார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், நாங்குநேரியில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் முதல்வர் வீட்டில் இருந்து படம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என விமர்சித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com