திமுக ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை...அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடாதது ஏன்?சீமான் கேள்வி!

திமுக ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை...அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடாதது ஏன்?சீமான் கேள்வி!

Published on

அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில், மதுரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியின் பொழுது ராணுவம் பெண்களை வன்புணர்வு செய்தது என்றும், தற்போது நடைபெறும் கலவரத்தை ஆளும் பாஜக அரசு விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை ஏன் அதிகமுகவின் ஊழல் பட்டியலையும் வெளியிடவில்லை எனவும், அதிமுகவின் கொடநாடு கொலை வழக்கு குறித்து ஏன் பேச மறுக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com