ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு: தளர்வுகள் என்னனென்ன ?

தொற்று குறைந்த அரியலூர், கடலூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், மற்றும் விழுப்புரம், உள்ளிட்ட 23 மாவட்டங்களில்  பேருந்து  போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு:  தளர்வுகள் என்னனென்ன ?
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்  வகை இரண்டில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளை தற்போது  பார்க்கலாம்.

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி,  மற்றும் தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வகை இரண்டில்  இடம்பெற்றுள்ளன.

வகை 2-ல் உள்ள மாவட்டங்களில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளின் செயல்பாடுகளுக்கு மாலை 7 மணி வரை நேரத்தளர்வு அளிப்பதுடன் கூடுதலான செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுபாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ/வீடியோ, சலவை தையல் அச்சகங்கள், ஜெராக்ஸ் கடைகள், காலை 9 மணி முதல் 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

செல்பேசி மற்றும் அதைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னணு சாதனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம்.

சாலையோர உணவுக்கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.மாவட்டங்களுக்கு இடையே பொதுபேருந்து போக்குவரத்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர் சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com