தமிழினத்தின் வளர்ச்சிக்கு அளப்பெரும் தொண்டாற்றிய சங்கரய்யாவுக்கு புதிய விருது அறிவிப்பு...

தமிழினத்தின் வளர்ச்சிக்கு அளப்பெரும் தொண்டாற்றிய சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழினத்தின் வளர்ச்சிக்கு அளப்பெரும் தொண்டாற்றிய சங்கரய்யாவுக்கு புதிய விருது அறிவிப்பு...
Published on
Updated on
1 min read

தமிழினத்தின் வளர்ச்சிக்கு உதவியவர்களை பாராட்டும் விதமாக புதிதாக தகைசால் தமிழர் விருதினை அறிவித்து, அதற்கு தகுதியானவரை தேர்ந்தெடுக்க குழுவினையும் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.  இந்த குழுவின் ஆலோசனை கூட்டமானது தலைமை செயலகத்தில் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்ட முடிவில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டவரும், சுதந்திர போராளியும், எம்எல்ஏ மற்றும் தமிழனத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவருமான சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வருகிற சுதந்திர தினத்தன்று பாராட்டு சான்றிதழ், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, வழங்கப்பட உள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com