"நான் முதல்வன்" திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியீடு.. பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

மாணவர்கள், இளைஞர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
"நான் முதல்வன்" திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியீடு.. பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!
Published on
Updated on
1 min read

தனது கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்களை படிப்பில் மட்டுமல்லாது வாழ்விலும் மேம்படுத்தும் திட்டமாக இது அமையும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்கள் படிப்பிலும் சிந்தனையிலும் ஆற்றலிலும் மேம்படுத்தப்படுவர் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தலைமை செயல் அதிகாரி, துணைத் தலைவர்கள், திட்ட மேலாளர் உள்ளிட்ட 12 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com