நகராட்சி நிர்வாகத் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் 24 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.என்.நேரு கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நகராட்சி நிர்வாகத் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் 24 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறினார். தொடர்ந்து, ஓசூர் மாநகராட்சியில் மழை நீர் வடிகால் திட்டத்திற்காக வரும் ஆண்டில் 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுமெனவும் கூறினார்.