அன்பில் மகேஷூக்கு அடுத்த அடி! ``கட்சி நிதி என்ற பெயரில் அமைச்சரை சென்றடைந்த கோடிகள்.." - மீண்டும் ஜாமீன் மறுத்த நீதிமன்றம்!

"வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த குற்றத்தில் அன்பில் மகேஷை தொடர்புபடுத்துவதற்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது" என சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.
Another Blow to Anbil Mahesh – Court Denies Bail Again!
அன்பில் மகேஷூக்கு அடுத்த அடி! ``கட்சி நிதி என்ற பெயரில் அமைச்சரை சென்றடைந்த கோடிகள்.." - மீண்டும் ஜாமீன் மறுத்த நீதிமன்றம்!
Published on: 
Updated on: 
1 min read

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்.

இன்று அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி ஜாமீன் வழங்க மறுத்துள்ளது சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்.

"வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள தனியார் பள்ளி நிர்வாகிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த குற்றத்தில் அன்பில் மகேஷை தொடர்புபடுத்துவதற்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளது" என சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.

சுமார் 100 கோடி அளவு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படும் இந்த வழக்கில் முடிவெடுக்கும் முன்னர், "தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் முடிவுகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் இருந்து பெருந்தொகை வசூலிக்கப்பட்டு கட்சி நிதி என்ற பெயரில், அன்பில் மகேஷை சென்றடைந்துள்ளதாக சாட்சியங்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் தொடர்பு, அரசகுமாரின் குற்றப் பின்னணி, அன்பில் மகேஷ் கைதுக்குப் பிறகு முத்துகுமார் சரண் அடைந்தது ஆகிய நடவடிக்கைகள் இந்த பொருளாதாரக் குற்றத்தின் தீவிரத்தைக் காட்டுவதாக நீதிமன்றம் கூறியுள்ளது.

சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க நபரான மனுதாரருக்கு ஜாமீன் வழங்கினால், விசாரணை பாதிக்கும் என்ற காவல்துறையின் வாதத்தை ஏற்று ஜாமீன் வழங்க மறுத்துள்ளது நீதிமன்றம்.