"நீட்டுக்கு எதிரான கையெழுத்து மாணவர்களை குழப்பும் செயல் " - பாமக தலைவர் ஜி.கே. வாசன்

"நீட்டுக்கு எதிரான கையெழுத்து மாணவர்களை குழப்பும் செயல் " - பாமக தலைவர் ஜி.கே. வாசன்
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் ஆளுநருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் நிலையில் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாரளர்களிடம் பேசிய அவர்:-

"தமிழகத்தில் ஆளுநருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி  உள்ளதாக  தெரிவித்தார்.

தமிழக உளவுத்துறையின் செயல்பாடு கேள்விக்குறியாக  உள்ளதால் தான், ஆளுநர் மாளிகை மீது இப்படி ஒரு தாக்குதல் நடைபெற்றுள்ளதாக கூறியவர், மக்களின் அச்ச உணர்வை போக்கும் வகையில் சட்டம் ஒழுங்கை சீர் செய்வது தமிழக அரசின் கடமை என்றார். 

ராஜ் பவன் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்புலம் குறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

நீட்  தேர்வில் ஏழை எளிய மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் கணிசமாக மருத்துவ படிப்பில் வெற்றி பெற்று சேர்ந்து இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்ட ஜிகே வாசன்,
ஒவ்வொரு பள்ளிகளுக்கும்  சென்று திமுக நடத்தும் கையெழுத்து வேட்டை, மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்பம்  செயலாக உள்ளது என்றார்.

நீட் தேர் ரத்து செய்ய வேண்டும் என்றால், அதனை திமுக சட்டபூர்வமாக  கையில் எடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் ஒரே வழி என்றார்.

பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அரசியல் நோக்கத்தில் மக்களை திசை திருப்ப திமுக பல விளையாட்டுகளை கையில்  எடுத்துள்ளதாக கூறினார்.
எதிர்க்கட்சிகளின் கொடி மரங்களை வெட்டி சாய்ப்பதால் மட்டும், திமுக கொடி பறந்து விடாது; எதிர்ப்பலைகள் தான் மிஞ்சும்",  என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com