அகரம், கீழ்நமண்டி அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...!

அகரம், கீழ்நமண்டி அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...!

Published on

அகரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கீழ்நமண்டி அகழாய்வு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொல்லியல் துறை சார்பில் 2022-2023ம் ஆண்டு எட்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக, சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நமண்டி ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மேலும், கீழடி அருங்காட்சியகத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ள செயலியையும் தொடங்கி வைத்தார். 

தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி வருவாய் வட்டங்களை சீரமைத்து முத்துப்பேட்டையைத் தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com