அவசர கால பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமித்து உத்தரவு...

மாவட்ட வாரியாக வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் நியமனம்
அவசர கால பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமித்து உத்தரவு...
Published on
Updated on
1 min read

அமைச்சர்கள் சிலரை மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும்  உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சேலம் மாவட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்திற்கு கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர்  எ.வ. வேலு, தருமபுரி மாவட்டத்திற்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், திருவாரூர் மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் . சக்கரபாணி ஆகிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சார துறை அமைச்சர் .செந்தில் பாலாஜி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி , பெரம்பலூர் மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் , தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அந்தந்த  மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com