
தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட் வசதி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மென்பொருள் நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் அரசு கேபிள் நிறுவனம் நடத்தியதில் 400 கோடி ரூபாய் வரை கடன் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும் அரசு கேபிள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாக விமர்சித்தார்.