`ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்' "தவெக MLA-வை கைது செய்ய முதல்வருக்கு பயமா.." - EPS வலியுறுத்தல்.. MLA அருள் விக்னேஷ் சொன்ன பதில் என்ன?

"ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் , அம்மாவட்டத்தின் நிர்வாக நீதிபதியும் (District executive Magistrate) ஆவார் , அவருக்கே நீதி இல்லை என்றால் , இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?" - முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
"Arrest TVK MLA for sending obscene message to District Collector" - EPS urges; What was MLA Arul Vignesh's reply?
`ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்' "தவெக MLA-வை கைது செய்ய முதல்வருக்கு பயமா.." - EPS வலியுறுத்தல்.. MLA அருள் விக்னேஷ் சொன்ன பதில் என்ன?
Published on: 
Updated on: 
2 min read

தமிழக வெற்றிக் கழகம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியாருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தகவல் வெளியாகியிருக்கும் விவகாரம் பேசு பொருளாகியிருக்கிறது.

இதனைக் கண்டித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தவெக கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் வீட்டிற்கே சென்று தொல்லை அளித்ததாகவும் வருகின்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரு மாவட்டத்தின் மக்கள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஆட்சியர். அந்த ஆட்சியர் அவர்களுக்கே பாதுகாப்பு இல்லை; அதுவும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரிடம் இருந்தே! கேவலம்!!

ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் , அம்மாவட்டத்தின் நிர்வாக நீதிபதியும் (District executive Magistrate) ஆவார் , அவருக்கே நீதி இல்லை என்றால் , இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ? முதல்வரே பதில் என்று எதாவது உங்களிடம் இருந்து முதலில் வருமா?

“உள்ளாடையுடன் நிற்கவைப்பேன்” என்று மிரட்டும் அமைச்சர், மனு கொடுக்க வந்தவரைத் தாக்கி “ஆபாச அர்ச்சனை” செய்து அதை மறைக்க முயலும் துணை சபாநாயகர், எல்லாவற்றிற்கும் மேலாக “ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்” அனுப்பிய MLA என்று தவெக கட்சியைச் சேர்ந்தோர் சட்டம் ஒழுங்கைக் காக்கும் லட்சணம் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

தங்கள் கட்சியினர் தவறு செய்தால் வாய்மூடி மவுனியாக இருக்கும் அரசு , மற்ற கட்சியினர் செய்திருந்தால் இன்று அனைத்து மைக்குகள் முன்னரும் so called spokespersons எவ்வளவு பேசியிருப்பர்??

நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது ஆட்சியைக் காப்பற்றிக் கொள்ள, MLA மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பயப்படுகிறாரா?

வாக்களித்த மக்களின் பாதுகாப்பை விட, முதலமைச்சர் நாற்காலி தான் திரு. ஜோசப் விஜய்க்கு முக்கியமென்று கருதுகிறாரா?

பாலியல் வழக்கு ஒன்றில் தொடர்பு இருந்ததாக ஸ்ரீவைகுண்டம் தவெக MLA விஜய் சரவணன் மீது வழக்கே பதியாமல், அவருக்கு சட்டமன்றத்திலேயே “Good Conduct Certificate” அளித்து வழக்கை இழுத்து மூடியது அதே Formula-வை அருள் விக்னேஷுக்கும் பயன்படுத்தப் போகிறதா இந்த அரசு?

ஒரு ஆட்சியாளராக மாவட்ட ஆட்சியருக்கு நடந்த இந்த கொடுமைக்கு எதிராக வழக்கு பதிந்து தன் கட்சி MLA-வை கைது செய்ய வேண்டும் நேர்மையான, அரசியல் குறுக்கீடற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
செய்வீர்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன் செய்தது என்ன?

இந்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "எங்கள் முதலமைச்சரின் நிர்வாகத்தின் கீழ், யார் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும், முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்," எனப் பதிலளித்தார்.

MLA அருள் விக்னேஷ் பதில்

தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அப்பட்டமாக மறுத்துள்ளார் MLA அருள் விக்னேஷ். "கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் குறித்த முறைகேடுகளை நான் பேசி வருகிறேன். என்னைத் தடுப்பதற்காக கட்சியிலும் மக்கள் மனங்களிலும் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இத்தகைய பொய்களை பரப்பி வருகின்றனர்" எனக் கூறியுள்ளார்.

"Arrest TVK MLA for sending obscene message to District Collector" - EPS urges; What was MLA Arul Vignesh's reply?
``துப்பாக்கியால் கொலை.. ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு" - முதலமைச்சரை சாடிய உதயநிதி!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.