"கலைஞர் நூற்றாண்டு விழா" திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்!

"கலைஞர் நூற்றாண்டு விழா" திமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்!
Published on
Updated on
1 min read

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந் தேதி தொடங்குகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக கொண்டாட தி.மு.க. தலைமை திட்டமிட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து திமுக தலைமை கழகம் சார்பில் அனைத்து அணிகளுக்கும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி நூற்றாண்டு விழாவை கொண்டாட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக மகளிர் அணி செயலாளர் கணிமொழி தலைமையில் மகளிரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சுமார் 2 மணி நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது

இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், முன்னாள் அமைச்சர் தமிழரசி, திமுக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன் உட்பட மகளிர் அணி நிர்வாகிகள் பலர்  பங்கேற்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com