கலைஞர் நூற்றாண்டு விழா...முதலமைச்சர் நாளை ஆலோசனை!

கலைஞர் நூற்றாண்டு விழா...முதலமைச்சர் நாளை ஆலோசனை!

Published on

கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை காலை 11 மணியளவில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.  

இந்த கூட்டத்தில், வரும் ஜூன் 3-ம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com