
திமுக அமைச்சர்கள் 2 பேருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில், 2 அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், 2 அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில், தற்போது மற்ற 2 அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்குகளை, சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்யவுள்ளது. அமைச்சர் பொன்முடி வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிக்க || புதிய பரவனாற்றில் தண்ணீர் திறக்கும் NLC!!