தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 267 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தினசரி பாதிப்பு 12 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது கொரோனா பாதிப்பு...
Published on: 
Updated on: 
1 min read

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து உச்சத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.  இந்த நிலையில் புதிதாக 11 ஆயிரத்து 805 பேருக்கு மட்டுமே இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ள சூழலில், தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரமாக குறைந்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 267 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதன் மூலம்  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 68 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் அதிகபட்சமாக ஆயிரத்து 563 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் தொற்றின் பாதிப்பு 793 ஆக பதிவாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com