மாணவர்களை சாதி பெயரை கூறி காலில் விழ சொன்ன அரசியல் பிரமுகர்...குவிந்த போலீசார்!

மாணவர்களை சாதி பெயரை கூறி காலில் விழ சொன்ன அரசியல் பிரமுகர்...குவிந்த போலீசார்!
Published on
Updated on
1 min read

திருச்செங்கோடு அருகே மாணவர்களை சாதிப் பெயர் குறிப்பிட்டு தாக்கிய  வணிகர் சங்கத் தலைவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது 

சாதியை சொல்லி தாக்குதல்:

நாமக்கல் மாவட்டம்  அருகே உள்ள  பெரிய மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் கடை ஒன்றிற்கு சென்ற போது, அவர்களை சாதியை சொல்லி திட்டியதுடன் காலில் விழுமாறு தாக்குதல்  நடத்தியதாக கூறப்படுகிறது.

அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது:

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் மாணவர்களை தாக்கியவர்கள்  பெரியமணலியை சேரந்த வணிகர்சங்க தலைவரும் அதிமுக பிரமுகருமான தங்கமணி மற்றும் அவரது மகன்கள் பூபாலன்  மற்றும் சேகர் என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள்  3 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்  வழக்கு  பதிவு செய்யப்பட்டது.

வணிகர் குற்றச்சாட்டு:

இதை கண்டித்து பெரிய மணலி கிராம வணிகர்கள் கடை அடைப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  அவர்களை  போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த வணிகர் ஒருவர் மாணவர்கள் பிரச்சனையை ஊர் பிரச்சனையாக மாற்றுவதாக குற்றம்சாட்டினார்.

கண்காணிப்பு பணியில் போலீசார்:

இதை தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே  மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் பெரியமணலியில்   24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com