மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு குறித்து விழிப்புணர்வு..!

Published on

சென்னை வேப்பேரியில் மனவளர்ச்சி குன்றிய மாணவ மாணவிகள்  மாற்றுத்திறனாளிகள் சமூக தரவு கணக்கெடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தட்டன் சாலையில் ’Opportunity’ என்கிற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை 88 வயதான பள்ளியின் தாளாளர் செல்வி கஸ்தூரி தேவராஜ் அவர்கள் தலைமையில் மாணவ  மாணவிகள் கையில் பதாகையுடன் விழிப்புணர்வு செய்து வந்தார்கள். 

அதில் மாற்று திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கொண்ட கணக்கெடுப்பு நடத்த இருப்பதாகவும், வீட்டிலேயே இருக்கும் உடல் ஊனமுற்ற மற்றும் மன வளர்ச்சி குன்றிய நபர்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக வாசகத்தை ஒட்டி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

மேலும் இந்த பதாகைகளில்  “வாழ விடுங்கள் வாய்ப்பு தாருங்கள்”, எனவும்  “ஊனம் ஒரு தடை அல்ல ஊன்றுகோலாய் உன் தன்னம்பிக்கை இருக்கும் போது”,  எனவும், பதிவு செய்யப்பட்டு இருந்தது. 

குறிப்பாக பரிதாபம் வேண்டாம் ஆதரவு வேண்டும், தடையின்றி தலை நிமிர்வோம் தடைகள் தாண்டி வென்றிடுவோம் என்பது கொண்ட பதாகைகளை அனைத்து மாணவ மாணவிகள் கையில் ஏந்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.  

இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதிக்கு உட்பட்ட  போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டி வேலு மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com