சாலை விதிகளை பின்பற்ற விழிப்புணர்வு...! விதிகளை கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு...!

சாலை விதிகளை பின்பற்ற விழிப்புணர்வு...! விதிகளை கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு...!
Published on
Updated on
1 min read

சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தினர்  விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சென்னை சைதாப்பேட்டை சிக்னல் அருகில் சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் மற்றும் கிண்டி போக்குவரத்து காவலர்கள் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் அடங்கிய விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர். சாலை விதிகளை முறையாக கடைபிடித்து வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டிகளுக்கு ரோஜா மற்றும் பரிசுகளை வழங்கி கெளரவப்படுத்தினர். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அந்த சங்கத்தின் தலைவர் சீனிவாசன், சாலை விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடிப்பது இல்லை என்றும் அதனால் தான் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக கூறினார். வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com