சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு கர்நாடக சங்கீத இசையமைப்பாளர் டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா மேம்பாலம் என பெயர் வைக்க மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் ஆகஸ்ட் மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மொத்தம் 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு கர்நாடகா சங்கீத இசையமைப்பாளர் டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா என பெயர் மாற்றம் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் சமுதாய நலக்கூடங்களில் ஓய்வு பெற்ற அலுவலர்களின் குடும்ப நிகழ்ச்சிக்கு 50 சதவீத சலுகை கட்டணத்தில் அனுமதி வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் பொது தனியார் கூட்டாண்மை முறையில் பயோ சி.என்.ஜி அலை உரம் தயாரிக்கும் அழகு பொருள் மீட்பு வசதி மற்றும் குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கும் வசதி ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான தீர்மானம் உள்ளிட்ட 58 தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளது.