”5 ஆண்டுகள் மட்டும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” அன்புமணி ராமதாஸ் பேச்சு!

”5 ஆண்டுகள் மட்டும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” அன்புமணி ராமதாஸ் பேச்சு!
Published on
Updated on
1 min read

மதுவிலக்கிற்காக போராடும் ஒரே கட்சி பாமக தான் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் கீழவீதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் 50 ஆயிரம் கோடி என்ற அளவில் உள்ள மது விற்பனையை அடுத்த மூன்று ஆண்டுகளில் 80 ஆயிரம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்க உள்ளதாகவும், முதல் கையெழுத்து பூரண மது விலக்கு என்று கூறிய ஸ்டாலின் இப்போது அதனை மறந்துவிட்டதாகவும் கூறினார். திமுகவின் வீழ்ச்சி என்பது மதுவிலக்கு அமைச்சரால் தான் ஏற்படும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com