ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஜாக்கிரதை- எச்சரித்த ரெஜிஸ்டரார்...

மழையால் நனைந்த பொருட்களை பொது மக்களுக்கு விநியோகிக்கும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுத்துறை பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் ஜாக்கிரதை- எச்சரித்த ரெஜிஸ்டரார்...
Published on
Updated on
2 min read

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாத்து, பொதுமக்களுக்கு தடையின்றி பொது மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் வலியுறுத்தியுள்ளார்.

மழை பற்றும் புயல் காரணமாக பாதிப்புக்குள்ளாகக் கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான பகுதிகளுக்கு உடனடியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு பெற்று தேவையான பொருட்களை நகர்வு செய்து, பாதுகாப்பாக சேமித்து வைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அத்தியாவசியப் பொருட்களின் நகர்வு மற்றும் விநியோகத்தை அன்றாடம் கண்காணித்து, அனைத்து கிடங்குகள் மற்றும் நியாயவிலைக் கடைகளிலும் போதுமான அளவு அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு உள்ளதை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும்,
தமிழ்நாடு துகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் எந்தவொரு கிடங்கியேனும் அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு குறைவாகவோ/இல்லாமலோ இருப்பின் அதை சம்பந்தப்பட்ட மண்டல மேலாளர் / மாவட்ட வழங்கல் அலுவர் / மாவட்ட ஆட்சியர் / தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் கவனத்திற்கு உடன் எடுத்து செல்ல வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரிசி, மண்ணெண்ணை உட்பட மெழுகுவர்த்தி, அவசரகால விளக்கு (Cindles, Emergency Light; -- Tirecht light) மற்றும் தீப்பெட்டிகள் தேவையான அளவு இருப்பு வைத்திருப்பதோடு,   தேவையான மண்ணெண்ணெய் பேரல்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் பொது விநியோகத்திட்ட பொருட்களை நகர்வு செய்வதற்கு மாற்று வழி தடங்கள் மற்றும் முன்னேற்பாடு விவரங்கள் அடங்கிய அவசரகால திட்டம் (Cantingency phun sof modes/route) ஒன்றினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் சேதமடைந்து, நுகர்வுக்கு ஏற்றதாக இல்லாத போது அப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு அதற்கு மாற்றாக நல்ல பொருட்களை நியாய விலைக் கடைகளுக்கு காலம் தாழ்த்தாமல் உடனே அனுப்ப உரிய ஏற்பாடுகள் செய்வதோடு,மழையால் நணைந்த அரிசி, சர்க்கரை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு, புகார் ஏதேனும் வரப்பெறின், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com