போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் நடத்திய சைக்கிள் பேரணி..!

போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் நடத்திய சைக்கிள் பேரணி..!
Published on
Updated on
1 min read

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் உத்தரவின் பேரில், மாதவரம் பொன்னியம்மன்மேடு குடியிருப்போர் நலசங்கத்தினருடன் இணைந்து பேரணி நடத்தை முடிவு செய்துள்ளனர். அதன் படி கொளத்தூர் காவல் மாவட்டம், புழல் சரகத்திற்குட்பட்ட மாதவரம் காவல்துறையினர் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சிறுவர் சிறுமிகள் பங்கேற்ற  விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை நடத்தினர். 

இந்த பேரணியை மாதவரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் காளிராஜ், உதவி ஆய்வாளர் சிவசங்கரன், 29 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் திருநாவுக்கரசு ஆகியோர் துவக்கி வைத்து சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர். 

இந்த சைக்கிள் பேரணியானது மாதவரம் பொன்னியம்மன்மேடு பிரகாஷ் நகர், வாழைத்தோப்பு, கற்பகம் நகர் ஆகிய பகுதிகளில்  உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து பொதுமக்கள் இடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் போதை ஒழிப்பு குறித்த கோஷங்களை எழுப்பியவாறு நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள்  சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com