
பீகாரில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்த செயல்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம் பாஜக மக்களின் ஓட்டுக்களை வீணடிக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியல் சூழ்ச்சி என்ற பல விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் தமிழகத்திலும் 7 லட்சம் பீகாரிகளை வாக்காளர்களாக சேர்க்கும் வேலை நடைபெற்று வருகிறது, இதற்கு நாம் தமிழர் கட்சி, விசிக உள்ளிட்ட பல அமைப்புகள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்,
மேலும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், “ வாக்காளர் சிறப்புத் திருத்தம்’ என்ற பெயரில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசர கதியில் இலட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்குவதும், இலட்சக்கணக்கான வாக்காளர்களைப் புதிதாகச் சேர்ப்பதும் மக்களை முட்டாளாக்கி, மக்களாட்சி முறைமையைக் கேலிக்கூத்தாக்கும் கொடுஞ்செயலாகும்.
வாக்காளர் சிறப்புத் திருத்தம்‘ என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமைப் பறிப்பை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் தமிழர் அரசதிகார உரிமையைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கின்றேன்” என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு இடங்களில் போராட்டம் வெடிக்கும்- ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் சிபிஐ சங்கர் பேட்டி.!
ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் மற்றும் சிபிஐ (எம்எல்) தேசிய குழு சார்பில் தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது தேசிய குழு உறுப்பினர் சங்கர் பேசும்போது, பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர் பட்டியலை முழுமையாகத் திருத்துவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் 'சிறப்புத் தீவிர திருத்த' நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 65 லட்சம் பேரை நீக்கம் செய்துள்ளது. பீகாரில் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள மாநிலங்களிலும் இதுபோன்று வாக்காளர்களை நீக்க உள்ளனர். மேலும் தமிழகத்தில் 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகத்துடன் சேர்க்க பார்க்கிறார்கள் இது ஆபத்தானது. இது சம்பந்தமாக இந்தியா கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளோம்.
தமிழகத்தில் ஆணவப் படுக்கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. உடனடியாக தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியில் 10 ஆண்டுகளாக பணியில் இருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் என்று கூறினார்கள், ஆனால் 20 வருடங்களாக பணியாளர்கள் பணி செய்து வருகிறார்கள் அவர்களுக்கு வேலை நிரந்தரம் செய்யவில்லை. உடனடியாக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும், கார்ப்பரேட் நிறுவனமே வெளியேறு என்று கூறி 13 -ஆம் தேதி விவசாய மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.