

விஜய் கட்சி துவங்கிய நாளிலிருந்தே அவருக்கான ஆதரவும், ரசிகர் கூட்டமும் பெருகி வழியத்துவங்கியது. விஜய் சில முக்கியமான இடங்களில் அரசியல்வாதியாக கோட்டை விட்டாரா? என்றால், ஆம் உண்மைதான். அதற்கு காரணம் அவர்கள் புதியவர்கள் அரசியலுக்கு பழக்கமில்லாதவர்கள், மேலும் அரசியல்மயப்படாத தொண்டர்களை வைத்திருப்பவர்கள். ‘தவறி ஒரு முறை செய்தால் தான் அது தவறு.. மீண்டும் மீண்டும் செய்தால்..” அதை என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ஆனால் அவரின் அரசியல் பிரவேசத்தால் 41 -உயிர்கள் பலியானது என்ற உண்மையை இனி யாராலும் மாற்ற முடியாது. ஆனாலும் மக்கள் விஜய் மீது அதிகளவிலான வெறுப்புணர்வை உமிழவில்லை என்றுதான் தோன்றுகிறது. மேலும் இன்னமும் விஜயை பின்தொடரும் இளைஞர்கள் இருக்கின்றனர். அதுவே அவரின் மிகப்பெரும் பலம்.
திமுக ஆட்சிக்காலத்தில் நிறைய பெரும் தவறுகளை செய்துள்ளது. ஆட்சி அமைத்ததிலிருந்து, ஊழல், தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள், காவல் மரணங்கள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக திமுக -வின் இமேஜை வெகுவாக உடைத்த ஒரு நிகழ்வு என்றால் அது ‘தூய்மை பணியாளர் போராட்டம் தான்” சென்னை திமுக -வின் கோட்டை என்று அறியப்படும் பகுதியாகும்.ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு மக்கள் திமுக மீதான தங்கள் வெறுப்பை வாக்குகளில் காட்டுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
அடுத்ததாக அதிமுக -பாஜக கூட்டணி ஒருவேளை அதிமுக - தவெக கூட்டணி அமைத்திருந்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர் சிலர். ஆனால் அது எடப்பாடியின் முடிவு மட்டுமல்ல அமித்ஷா -வின் முடிவும் கூடத்தான் அதிமுக - பாஜக -வின் பிடியில் உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.
ஆனால் எடப்பாடியின் விருப்பம் வேறாக உள்ளது. கட்சியின் தொண்டர்கள் கூட்டணியின் விருப்பம் குறித்து பேசுவதை கூட ஒருவிதத்தில் வைத்துக்கொள்ளலாம், ஆனால் கட்சியின் தலைமை பொது மேடையில், “பிள்ளையார் சுழி போட்டாச்சு..யாரும் எதிர்பார்க்காத கூட்டணி அமையும்” என பேசுவது பெரும் சர்ச்சையாகி இருந்தது.
இந்த சூழலில்தான் இந்த சம்பவங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், “அதிமுக -விற்கும் அதன் தொண்டர்களுக்கும் ஒரு விஷயம் நன்றாக தெரியும். இந்த முறை விஜய் இல்லை என்றால், அதிமுக தோல்வியை சந்திப்பதோடு மட்டுமல்லாமல், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று. ஆனால், அதை இவ்வளவு பகிரங்கமாக சொல்ல தேவையில்லை. அது உங்கள் அச்சத்தையும், பலவீனத்தையும்தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி ‘பவன் கல்யாண்’ மாடல் பற்றியும் அதிமுக -வினர் பேசிக்கொண்டிருக்கின்றனர். பவன் கல்யாண் மாடல் என்றால், கூட்டணி வைத்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தான் அது. ஒருவேளை அதிமுக -தவெக கூட்டணி இணைந்து ஆட்சி அமைத்தால், விஜய் துணை முதல்வராக்கப்படுவார் என்பதுதான் அதன் பொருள்.
ஆனால் ஒரு புராதன கட்சி பலமுறை மாநிலத்தை ஆண்ட கட்சி விஜய் -க்காக இப்படி காத்திருக்க வேண்டுமா? இன்னும் சொல்லப்போனால் அவர்கள் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒருபக்கம் இருந்தால் திமுக -வும் அதன் கூட்டணிகளும் என்ன ஆனாலும் விஜய் அதிமுக உடன் இணைந்துவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறது. ஒருவேளை இம்முறை திமுக தோற்றால் உதயநிதி ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது எனது நம்மைவிட அவர்களுக்கு நன்றாக தெரியும்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.